சுதந்திர தினக் கவிதை

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*சுதந்திர தினக்*
*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

சுதந்திர தினத்தைப் பற்றி
இன்றைய
தலைமுறைகள்
உணர வேண்டுமானால் ...
அவர்கள்
ஒரு மாதத்திற்காகவாவது
அடிமைகளாக
வாழ்ந்தாக வேண்டும்.....

இன்று
சுவாசிக்கும்
இந்தச் சுதந்திரக்காற்று
விடுதலைப் போராட்டத்தில்
இறந்துப் போனவர்களின் மூச்சுக்காற்று என்பதை
ஒரு நாளும்
மறந்து விடாதே ....!

இந்த சுதந்திரதினம்
ஆண்டில்
ஒரு நாள் தான் கொண்டாடப்படுகிறது ....
ஆனால்
இதைக் கொண்டாட
இரனூறு ஆண்டுகள்
ஆங்கிலேயரிடம்
நம் முன்னோர்கள்....
அடிபட்டு
உதைபட்டு
மிதிபட்டு
சிறைபட்டு
சிரமப்பட்டு
உயிர்விட்டு
உதிரம் விட்டு
கண்ணீர் விட்டு
கஷ்டப்பட்டு
பெற்றார்கள் என்பது
எத்தனை பேருக்கு தெரியும்...?

சுதந்திர தியாகி என்று
சொன்னதும்
காந்தி நேரு
காமராஜர் வ உ சி
கொடிகாத்தகுமரன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பகத்சிங் தான்
ஞாபகத்திற்கு வரும் ...
ஆனால்
பெயர் தெரியாத
முகம் தெரியாத
முகவரி தெரியாத
எண்ணிச் சொல்ல முடியாத
எண்ணற்றவர்கள்
சுதந்திரத்திற்காக
உடல்
பொருள்
ஆவி இழந்தார்கள் என்பதை
நாம்
என்று உணரப் போகிறோம்?

ஆங்கிலேயர்கள்
நம் தேச மக்களை
லத்தியால்
அடித்த போதும்
பூட்ஸ் காலால்
உதைத்த போதும்
துப்பாக்கியால்
துளைத்தப் போதும்
சிதறிய இரத்தங்கள் தான்
நம் தேசிய கொடியில்
சிவப்பு வண்ணமாக
பூசப்பட்டுள்ளதை
எந்த அளவுக்கு நாம் உணர்ந்துள்ளோம்....?

ஆங்கிலேயர்களின்
சூழ்ச்சிகளுக்கும்
சன்மானங்களுக்கும்
பதவிகளுக்கும்
விலை போகாமல்
இந்திய சுதந்திரத்துக்கு உண்மையாக
உழைத்தவர்களின்
"மனதைத்" தான்
நம் தேசியக் கொடியில்
"வெள்ளை நிறமாக "
வைக்கப்பட்டுள்ளதை
நாம் அறிவோமா?

ஆங்கிலேயர்களின்
அடக்கு முறைகளையும்
அட்டூழியங்களையும்
அத்துமீறல்களையும் கண்டு
நம் நாட்டு மக்களின்
உடம்பில் புடைத்து எழுந்து
பச்சை நரம்புகள்
பச்சை நிறமாக தீட்டப்பட்டது....

அசோக சக்கரத்தில்
இருப்பது
"கோடுகள் அல்ல...."
ஆங்கிலேயர்களால்
நம் தேச மக்களின்
உடம்பில் உடைக்கப்பட்ட
"எலும்புத்துண்டுகள்......"

தேசியக் கொடியைக்
கட்டி இருப்பது
வெறும் கயிறு என்று
நினைத்துவிடாதீர்கள் .......
சுதந்திரப் போராட்டத்தில்
கணவனை இழந்த
எத்தனையோ
பெண்களின்
"தாலிக்கயிறு " என்பதை
மறந்து விடதீர்கள்....!

தேசியக் கொடியை
விரிக்கும் போது
உள்ளிருந்து
விழும் பூக்கள்
அழகுக்காக அல்ல ....
சுதந்திரத்துக்காக
இன்னுயிர் ஈந்தவர்களுக்கு
நாம் செலுத்தும்
அஞ்சலி பூக்கள் என்பதை
இனியாவது
தெரிந்து கொள்வோம்......!

சுதந்திரத்தைப் பற்றி
கவிதை எழுத
முயற்சிப்பது....
கடலை
குடத்துக்குள் அடைக்கவும்
பிரபஞ்சத்தை
பெட்டிக்கள் அடைக்கவும்
முயற்சிப்பதற்கு
ஒப்பானதாகும்.....!

சுதந்திர தினத்தை
போற்றுவோம்.....!
சுதந்திரத்தைக்
காப்பாற்றுவோம்....!

அனைவருக்கும்
சுதந்திர தின
நல்வாழ்த்துகள்!!!

*கவிதை ரசிகன*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

எழுதியவர் : கவிதை ரசிகன் (15-Aug-24, 8:14 pm)
பார்வை : 19

மேலே