நன்மதி வெண்பா - நூல் - பாடல் 54
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
தலைமறையப் பொற்குவையைத் தந்தாலும் அன்பு
நிலைபெறா தாங்கணிகை நெஞ்சில் - விலைமாது
மத்தகத்த டித்தாணை வைத்தாலு நன்மதியே
சித்தமக ளங்கமிலை தேர்! 54