ஞானப் பெண்ணே

ஞானப் பெண்ணே...!
06 / 09 / 2024

செங்கல்லும் சிமெண்ட்டும் சேர்ந்தது வீடல்ல
ஞானப் பெண்ணே - அது
அன்பும் பாசமும் குழைத்து கட்ட வேண்டுமடி
ஞானப் பெண்ணே
பொங்கும் புதுப்பானை பொங்கல் இல்லையடி
ஞானப் பெண்ணே - அது
அங்கம் குளிரவே அன்பை பொங்கனும்
ஞானப் பெண்ணே
மனித நேயம் வெறும் வார்த்தை இல்லையடி
ஞானப் பெண்ணே - அது
சகமனிதனை மதித்து வாழ்வதில் இருக்கு
ஞானப் பெண்ணே
புத்தி மதிகள் சொல்வது எளிது
ஞானப் பெண்ணே - அது
புத்தியில் வைத்து நடப்பது கடினம்
ஞானப் பெண்ணே
அடுத்தவர் நோக்கி ஓர்விரல் நீட்டினால்
ஞானப் பெண்ணே - நம்மை
நோக்கி மூவிரல் பாயுமடி
ஞானப் பெண்ணே
சிதறும்படி சொற்களை கொட்டி விட்டால்
ஞானப் பெண்ணே - பின்
சிதறிய சொற்களை அள்ள முடியாதடி
ஞானப் பெண்ணை
இருக்கும்வரை கலங்கும் கண்கள் இல்லையென்றாலும்
ஞானப் பெண்ணே - நாம்
இறந்த பின்னால் கண்ணீர்விட வேண்டுமடி
ஞானப் பெண்ணே
தனக்கென நியாயம் உள்ளதென வாதிடும்
ஞானப் பெண்ணே - அது
பிறர்க்கும் உள்ளதென நம்பி தெளிந்திடு
ஞானப் பெண்ணே

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (10-Sep-24, 6:10 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 61

புதிய படைப்புகள்

மேலே