கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 2 பா 6 7 8 9 10

6 .
நானோ பிறப்பற் றவனழி வற்றவனும்
நானே உயிர்களின் ஈசன் பிரகிருதி
என்வசமே ஆயினும் என்மாயை யாலேயே
என்னைப் பிறப்பிக்கி றேன்

7 .
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

எவ்வெப்போ தில்தர்மம் வீழ்ந்ததர்மம் மேலெழுமோ
அவ்வப்போ தில்நானே பாரதா வந்திடுவேன்
ஒவ்வோர் பிறப்பை எடுத்து

8 .
பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

நல்லோரைக் காத்தற்கும் தீயோர்நா சத்திற்கும்
நல்லறத்தை இங்கே நிறுவும் பொருட்டும்
யுகம்தோறும் நானே பிறந்து வருவேன்
சகத்தின்கண் ணேகாண்டீ பா

9 .

திவ்யமான எந்தன் உயர்நற் பிறப்பினையும்
திவ்யமான எந்தன் உயர்நற் செயலையும்
நன்கறிவான் மீண்டும் பிறப்பெடுத் திங்குவாரான்
என்னையே வந்தடை வான்

10 .

ஆசையும் அச்சம் குரோதமும் நீங்கியே
நேசமுடன் என்னை அடைக்கலம் கொண்டவன்
ஞான தவசின் வழியில் புனிதனாகி
நானாகி நிற்பான் அவன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-24, 3:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே