ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

மூன்றடி மண் கேட்ட வாமன அவதார பெருமாள்
இரண்டடியால் உலகம் முழுதும் அளந்த பின்னர்
மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க
மகாபலி தன் தலையில் அதை வைக்கச் சொல்லிட
வாமனன் தனது அடியால் அவனை பாதாளத்தில் அழுத்திட
மகாபலியின் வேண்டுகோளுக்கு இணங்கி வருடம் ஒருமுறை
தனது மக்களை மகாபலி காண வரும் நாளே ஓணம் பண்டிகையாம்
கேரள மக்கள் அழகிய மலர் கோலமிட்டு வீடுமுழுதும் அலங்கரித்து
புதுத்துணி அணிந்து பலவித உணவு வகைகளைச் சமைத்துவைத்து
மேளதாளத்துடன் மகாபலியை வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை
ஆடல் பாடலுடன் தெரிவித்து ஆர்வத்துடன் கொண்டாடுவது
இந்நன்னாளில் தான் என்று அறிந்து கொள்வோமே

எழுதியவர் : கே என் ராம் (18-Sep-24, 2:48 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 10

மேலே