கண்ணின் அசைவினால் காதல்மொழி பேசுவான்

எண்ணத்தை ஊதுகுழலாக்கி
ஏகாந்தத்தில் குழலிசைப்பான்

வண்ண மயில்சிறகு
மெல்ல அசைய
இடையில் கைவைத்து
புன்னகைப்பான்

கண்ணின் அசைவினால்
காதல் மொழி பேசுவான்
ராதையுடன்

எண்ணிலா கோபியரின்
நெஞ்சில் பொறாமைத்தீ
வளர்ப்பான் கண்ணன்

எழுதியவர் : கவின்சாரலன் (15-Sep-24, 8:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே