நட்பை நேசிப்போம்..(உண்மையான தோழி/தோழனா நீங்கள்?) கட்டுரை

நட்பை நேசிப்போம்..(உண்மையான தோழி/தோழனா நீங்கள்?)

நட்பு என்பது ஆழமான அன்பின் உறைவிடம்! ஆனால் , அதை முழுமையாக உணர்வது ரொம்பவும் சிலர் தான்...
இவளும்/இவனும் என்னுடைய தோழி/தோழன் தான் என்று நம் உதடுகள் உரைத்தாலும் நாம் மனதார சொல்வது கிடையாது...
ஒரு சிலர், நம் வாழ்வின் ஒரு பகுதி தானே இவர்கள் பங்கு என்று, நண்பர்களை புரிந்து கொள்ள மாட்டார்கள்...
ஆனால், நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் சந்தோஷத்தின் பிறப்பிடமாக இருக்க வேண்டும் என்றால் நம்முடைய நண்பர்களை
முழுமையாக நேசிக்க வேண்டும்....

நம்மில் எத்தனை பேர் தன்னுடைய நண்பர்கள் மீது அதிகமான பாசத்தை வைத்துள்ளார்கள்?
உண்மையான அன்பை நம்முடைய அம்மாவிடம் இருந்து பெற முடியும்.. ஆனால், பெற்ற பாசம்...
ஆனால் எவ்வித உறவும் இல்லாமல் நம்முடைய நலனை விரும்புவது நம்முடைய நண்பர்கள்....

தன்னுடைய வேதனைகளை, கவலைகளை தன்னுடைய நண்பர்கள் கிட்ட பகிர்ந்து கொண்டர்வர்கள் மிகவும் குறைவாக தான் இருப்பார்கள் ...

எத்தனை விசங்களை நம் நண்பர்களுக்காக விட்டு கொடுத்திருக்கிறோம், செஞ்சிருகோம்னு பார்த்தால் ,குறைவாக தான் இருக்கும்.....
நாம் சாப்பிடும் போதும், வெளிய போகும் போதும் நம் நண்பர்களை எத்தனை முறை நெனைச்சி இருப்போம்!?

இதை எல்லாம் விட நண்பர்கள் தொலைவில் இருக்கும் போது.. Good Morning , Good Night , என்ற அளவில் மெல்லிய நூல் போலே நம் நட்பை வளர்த்து
கொண்டு இருக்கிறோம்....

நம்முடைய முதல் காதலை, தோல்வியை தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி இருக்கிறோமா?
காதலிப்பது ஒரு சுகம் என்றால் அக்காதலை நண்பர்களிடம் சொல்லி சந்தோஷ படுவது, அது ரெட்டிப்பு சந்தோசம்..

எவ்வளவு மனதில் கவலைகள் இருந்தாலும், நண்பர்கள் அருகில் இருக்கும் போது சந்தோசம் மட்டுமே நம் நிலையாக இருக்கும்..
கவலைகள் ஒரு இறகு போலே மனதில் இருந்து வெளியே மிதந்து செல்லும்...

எத்தனை கஷ்டமான காரியமாக இருந்தாலும் நம் நண்பர்களுகாக அதை செய்யணும்.. நம்முடைய நண்பர்களுக்கு உடனே, அந்த காரியத்தின்
அருமை புரிய விட்டாலும் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்... யாரையும் சீக்கிரம் நண்பர்களாக எடுத்து கொள்ள வேண்டாம்..
ஆனால் ஒருமுறை நண்பர்களாக ஏற்று கொண்ட பிறகு அவர்களை விட்டு விலக கூடாது...

தவறான செயல்களை செய்யும் போது நம் நண்பர்களை கவனிக்காது இருப்பது, இக்கட்டான சூழலில் நம் நண்பர்களுக்கு ஏற்ற அறிவுரை சொல்லாமல்
இருப்பது இவை எல்லாம் நம் நட்பின் அளவை நாமே அறிந்து கொள்ளும் அளவு கோள் ஆகும்...

நம் நண்பர்கள் மட்டும் தான் வாழ்கை என்று இருக்க வேண்டாம்.. ஆனால் நம் நண்பர்களும் நம் வாழ்கையில் ஒரு அங்கம் என்று உணர வேண்டும்...
பல சமயங்களில் நம் நண்பர்களுக்கும் நமக்கும் எதாவது ஒரு விசயத்தில் மனகசப்பு வந்து விடும் .. அந்த சமயங்களில் கூர்ந்து கவனித்து தவறை உணர்த்து
உடனே மனகசப்புகளை களைவது மிகவும் முக்கியமான ஒன்று.

நாம் சொல்வதை உடனே தோழனோ/தோழியோ செய்தால் அதை பாசத்துடன் செய்கிறாள்/செய்கிறான் என்று உணர வேண்டும்.. அந்த அன்பை நேசிக்க வேண்டும்...
அவ்வாறு அல்லாமல் அவர்களை வேலையாளாக நினைப்பது, நம் மீது நேசமுடன் இருபவர்களை நாமே தூக்கி எறிவர்தற்கு சமம்...

தோழமை என்பது பூலோகத்தின் சொர்க்க வாசல், அந்த வாசலின் சாவி நம்முடைய நேசமும், இதமான வரத்தையும் தான்..
நம்மின் அதனை கவலைகளையும் நம் நண்பர்களின் வார்த்தைகள், நீக்கி விடும். நண்பர்களின் தோள் சாய்ந்து இருக்கும் போது சந்தோசம் என்னும் நறுமண பூக்கள்
அழகு அழகாய் பூத்து குலுங்கும்..

உலகத்தில் எளிதில் கிடைக்காத அபூர்வங்களுள் நம்முடைய நண்பர்களும் அடங்குவார்கள்... நம் உயிர் மூச்சு போல நட்பையும் சுவாசிக்க வேண்டும்.
நட்பை நேசிக்க தொடங்கும் போது.. நம் நண்பர்களின் சீண்டல்கள், கோபங்கள், கோப வார்த்தைகள் இவை எதுவுமே நம் மனதை பாதிக்காது.
ஒவ்வொரு நாளும் நம் நட்பை வேர் ஊன்றி வளர செய்ய வேண்டும். எவ்வித வேறுபாடுகளும் நம் நட்பெனும் கிளையை ஆட்டி பார்க்க விட கூடாது..

இவை எல்லாம் இருந்தால் , உண்மையான நண்பர்களாக நாமும் உயிர் பிரிய தொழி/தோழன் களாக நம் நண்பர்களும் மாறி விடுவார்கள்...
இன்பமான இனிய காற்றை நம் நட்பெனும் சொர்க்கத்தில் வீச செய்வோம்.....

எழுதியவர் : நிஷாந்தினி.கே (20-Oct-11, 12:47 pm)
பார்வை : 5673

மேலே