அநியாயம்

கண்களைத் தூதுவிடாமல்
காலரைத் தூக்கிவிடாமல்
இருக்க முடிகிறது - நீ
எதிர்படாதத் தருணங்களில்!
என்ன அநியாயம்!
நீ அழகாக இருக்கிறாயாம்;
நியாயமாகப் பார்த்தால்
அழகே நீயாகத்தான் இருக்கிறது!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (19-Oct-24, 9:27 pm)
சேர்த்தது : Gopinath J
Tanglish : aniyaayam
பார்வை : 34

மேலே