அவள் ஒரு.....

💜💜💜💜💜💜💜💜💜💜💜

*அவள்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💜💜💜💜💜💜💜💜💜💜💜

பெண்ணே!
நீ என்ன?
பூச்சூடும் பூங்குயிலோ !
புன்னகை செய்யும்
பெண்மயிலோ....!

மாராப்பு போடும்
மாங்கனியோ.....!
மஞ்சள் பூசும்
வெண்பனியோ....!

புடவை கட்டி நின்ற
புதுக்கவிதையோ....!
அணிகலன்கள் அணிந்து வந்த
அறுசுவையோ....!

வளையல் மாட்டிய
வானவில்லோ...!
மோதிரம் போட்ட
தமிழ் சொல்லோ...!

மூக்குத்தி அணிந்த
முக்கனியோ....!
கொலுசு மாட்டிய
கோபுர கலசமே....!

மருதாணி வச்ச
மல்லிகை பூவோ.....!
தோடு போட்ட
தென்றல் காற்றோ...!

மை தீட்டிய மான்குட்டியோ....!
ஒட்டியானம் பூட்டிய
பூந்தொட்டியோ...!

நெற்றிசுட்டி அணிந்த
நெல்மணியோ.....!
பாசிமணி போட்ட
வெங்கலமணியோ...!

நடந்து வந்த நந்தவனமோ !
எழுந்து வந்த எழில் குளமோ !

உயிர் பெற்ற சிலையோ !
உணர்வு பெற்ற மழையும் !

எது என்று தெரியவில்லை...
எப்படி
அறிவதென்று புரியவில்லை.....?

*கவிதை ரசிகன்*

💜💜💜💜💜💜💜💜💜💜💜

எழுதியவர் : கவிதை ரசிகன் (19-Oct-24, 9:08 pm)
Tanglish : aval oru
பார்வை : 63

மேலே