நினைவோடையில் நின்றோர் நீலநிறப் பூங்குயில் கீதம் பாட
நினைவோடை யில்நின்றோர் நீலநிற பூங்குயிலும்
மனதைவரு டும்கீதம் மாலைநிலா வில்பாட
எனைமறந்து இனிதான ஏகாந்த மனவெளியில்
உனதுநினை வின்மென்மை உணர்வலைதன் னில்மிதந்தேன்
----நினை மன எனை உன எனும் ஒரே அடி எதுகையும்
அடிதோறும் காய் காய் காய் காய் என்னும் ஒரே வாய்ப்பாடும்
1 3 ஆம் சீரில் நி நீ ம மா எ ஏ உ உ எனும் சீர் மோனையும்
அளவடியில் அமைந்து பொலியும் கலிவிருத்தம்