எவண்டா என் பொண்ணை வரச்சொல்லிக் கூப்படறாவன்
பருவநிலை மாறிப் போனதால் கடுமையான வெயிலின் கொடுமை.
அந்தத் தெருவில் ஒரு வீட்டுக்குப் புதிகாகக் குடி வந்தவர்கள் மிகுந்த
பக்தி உள்ளவர்கள். தினமும் குடும்பத்தோடு கோயிலுக்குப்
போயிட்டு
வந்தாத்தான் மனநிம்மதி கிடக்கும் என்று நம்புவர்கள்.
அவர்கள் பையன் வர்ஷேஷ். தினமும் காலைக் கடன்களை
முடித்தவுடன் தண்ணீரில் குளித்துவிட்டு பூசை அறையில் அமர்ந்து
மழை வேண்டி பிரார்த்தனை செய்வது அவனது அன்றாடக்
கடமை..
அவனுக்கு 'வர்ஷா' என்றால் சமஸ்கிருதத்தில் மழை என்று தெரியும்.
'வா' என்பதற்கான சமஸ்கிருதச் சொல் என்ன்வென்று தெரியாது.
கடவுளிடம் சமஸ்கிருத்த்தில் வேண்டினால் தான் வேண்டுதல்
நிறைவேறும் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான்.
அன்று வெள்ளிக்கிழமை. வழக்கம் போல் குளித்துவிட்டு
வந்தவுடன் பூசை அறையில் அமர்ந்து "வர்ஷா கம்" (Varsha come ).
என்று ஆயிரத்தொரு தடவை சொல்ல விரும்பி ஆயிரம் தடவை
சொல்லிவிட்டு ஆயிரத்தோன்றவது தடவை "வர்ஷா கம்"
சொவதற்குள் அவனது வீட்டு கதவைத் தட்டிய பக்கத்து வீட்டுக்காரர்
"எவண்டா என் பொண்ணை வரச்சொல்லிக் கூப்படறவன். நானும்
அரை மணி நேரமா நீ ஆயிரம் தடவை என் பொண்ணை
வரச்சொல்லிக் கூப்பிட்டுட்டே இருக்கிறாய். என் பொண்ணு அதைக்
கேட்டு அழுதுட்டு இருக்கிறாள். வாடா வெளில..
இளைஞர் வெளியே வருகிறார். ஏண்டா நீ தான் என்
பொண்ணை வர்ச்சொல்லி ஆயிரம் தடவை கூப்பிட்டவனா? உனக்கு
என்ன திமிர்? இந்த வீட்டுக்கு நீங்க குடி வந்து ஒரு வாரம்கூட ஆகல.
அதுக்குள்ள் என் பொண்ணு பேரைச் சொல்லி வரச்சொல்லிக்
கூப்பிடுவயா? இதே மாதிரி இந்தத் தெருவில் வசிக்கும் இளம்
பெண்கள் பேரை எல்லாம் தெரிஞ்சு வச்சுட்டு ஒரு நாளைக்கு ஒரு
பொண்ணு பேரை ஆயிரம் தடவை சொல்லி அந்தப் பொண்ணை
வரச்சொல்லி கூப்புடுவயா?
ஐயா என்னை தப்பா நினக்காதீங்க. என் பேரு வர்ஷேஷ். எங்க
குடும்பம் ஆன்மீக நம்ம்பிக்கை உள்ள குடுமபம். கடுமையான
வெப்பம், வருண பகவானை வேண்டி மழைக்காக பூசை செய்து
'மழையே வா" என்று 1001 தடவை சொன்னால் வருண பகவான்
என் பிரார்த்தனையை ஏற்று அருள் புரிவார். மழையை வேண்டி
ஆயிரம் தடவை
சொல்லி முடித்து கடைசி 'மழையே வா' வை சொல்லி முடிப்பதற்குள்
நீங்க வந்து எனக்கு இடையூறு பண்ணிட்டிங்க.
நீ மழையே வான்னு வேண்டியிருந்தா நான் ஏண்டா
உன்னைக் கேட்கப் போறேன். நீ வர்ஷா கம்னு தானே சொல்லிட்டு .
இருந்த. வர்ஷா என் பொண்ணுப் பேரு. 'கம்'னா வா. உனக்கு
எவ்வளவு திமிர். என் பொண்ணுப் பேரை ஆயிரம் தடவை சொல்லி
வான்னு சொல்லியிருப்பே . . படிக்கிற பையன் நீ. புகார் கொடுத்து
உன் வாழ்க்கையை கெடுக்க விரும்பல, சாக்கிரதை.
ஐயா வேண்டுதலை சம்ஸ்கிருதத்திலே சொன்னா தான்
நிறைவேறும்னு சொல்லுவாங்க. சமஸ்கிருதத்தில் 'வர்ஷான்னா
மழை
சரி தம்பி உன் மேல தப்பு இல்ல. வருஷன்னா மழைன்னு அர்த்தம்
தெரியாமலே என் பொண்ணுக்கு அந்தப் பேரை வச்சிடடேன் அது
சாமி பேருன்னு
நீ சொல்லற வரைக்கும் நெணைசிட்டு இருந்தேன். உலகம் செழிக்க
மழை வேணும். என் பொண்ணுக்கு தேன்மொழின்னு பேரை
மாத்தப்போறேன். நன்றி தம்பி.