பிள்ளா பிள்ளாவாத் தான் இருக்கிறான்
பிள்ளா எங்கே?
@@@@@@@
ஏண்டப்பா தத்துரேசு (தத்ரேஷ்)
பிரேசிலுக்குப் போனதுக்கு அப்பறம் அந்த
நாட்டுக்காரனாகவே மாறிட்டயே!
@@@@@@@
என்னம்மா சொல்லற?
@@@@@@
வெளிநாட்டில் வாழற தமிழர்கள் கூட
அவுங்க பிள்ளைகளுக்கு அர்த்தமுள்ள
இல்லன்னா அர்த்தம் இல்லாத இந்திப்
பேருங்களை வச்சு நம்ம நாட்டின்
பெருமையும் அவுங்களோட தமிழ்ப்
பற்றையும் நிலை நாட்டறாங்க.
உம் பையன் பேரை என்னன்னு கூப்புட்ட?
@@@@@@@
அவன் பேரு 'பிள்ளா'.
@@@@@
என்ன பிள்ளாடா அது?
@@@@@@@
அது ஸ்பானிஷ் மொழிப் பேரு. அதுக்கு
'குறும்புக்காரப் பையன்'ன்னு அர்த்தம்.
@@@@@@@@
ஆமாண்டா. பிள்ளா, பிள்ளாவாத் தான்
இருக்கிறான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Pilla = Naughty child.

