நோக்குவர்மம் (நகைசுவைகவிதை)

சாலையில் நின்ற பெண்ணை
சலிக்காமல் நோக்கியவாறு நான் நின்றேன்
என்னவென அவள்கேட்டாள் ,
இதுதான் (நோக்குவர்மம்) என்றேன் ..........

சட்டென்று சாரல் அடிக்க
சட்டையெல்லாம் சிகப்புநிறம்,
பேருந்தில் சென்ற பெருசு பாக்கைமென்று
பட்டென்று உமிழ்ந்துவிட்டார்....

விழித்துக்கொண்டே நான் நிற்க
விட்டென்று பதில் தந்தாள் அந்த பாவிமக
இன்னும் புரியவில்லையா
இதுதான் (பாக்குவர்மம்) என்று....




எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.... (31-Oct-11, 3:32 pm)
பார்வை : 1416

மேலே