"தோழி வேண்டும்"
வாய் திறந்து பேசமுடியா
வகுப்புகளில் நான் பார்த்து
ரசித்திடவும் சிரித்திடவும்
விழிகள் வேண்டும்
கார்மேகமது கதறி அழும்
காலத்திலே எந்தன் கை பிடித்து
குடையில் அழைத்துச் செல்ல
கைகள் வேண்டும்
சாலையோரப் பெண்களின்
சேலை காற்றிலாடும் வேலை
ஓரப் பார்வை பார்க்கும் எந்தன்
காதை திருகிட வேண்டும்
காய்ச்சல் வந்த வேலை
கன்னம் தொட்டுப் பார்த்து
எந்தன் உள்ளங்கை பிடித்து
உள்ளம் உருகிட வேண்டும்
வேளையில் மூழ்கிடும் என்னை
நித்தம் நித்தம் தொல்லை
செய்திட வேண்டும்
வானத்திலிருந்து தவறி
விழுந்த தேவதை போல்
நெஞ்சம் கொண்டவள் வேண்டும்
என் குழந்தைகளிடம்
என்னைப் பற்றி கேலி
செய்திட வேண்டும்
நான் தாயாகும் நேரத்தில் சேயாகவும்
நான் சேயாகும் நேரத்தில் தாயாகவும்
மாறிடும் தோழி வேண்டும்
தருவாயோ ஆண்டவனே?