வானுலகில் என் நண்பனுக்கு கடிதம்

நண்பா, நீ நலமா,
உன் நினைவுகளோடு
நான் இங்கு நலமில்லை..!!

வாழ்நாள் முழுவதும்
நீ எங்கே எங்கே என்று
தேட வைத்து சென்றாய்..!!

உன்னோடு பழகிய நாள்கள்
பசுமையான நினைவுகளாய்,
அழியாத கல்வெட்டாய்,
இதய பெட்டகத்தில்..!!
உயிர் துடிப்பாய் துடித்து கொண்டு ..

நேற்று நீ என்னோடு போட்ட
சண்டைகள், சிறு பிள்ளையாய்
விரட்டியது நீங்காமல், நீ வந்து
சென்ற வாசம் அழியாமல்
இன்னும் இருக்கின்றது..!!

போ, போ என்று உன்னை
விரட்டியதற்கு பரிசாக தண்டனை
தந்தாயோ, குளிர்பான பேருந்து
ஏற்பாடு செய்து தந்து விடு
என்று சொல்லி விட்டு..!!

ஏன் சொல்லாமல், கொள்ளாமல்
நீயே ஏற்பாடு செய்து
எல்லோரையும் அழ வைத்து
நீ மட்டும் ஏன் கண் முடி
சலனமில்லாமல் தூங்கி சென்றாய்,
உன் செவி மடலில் என் அழுகை
கதறல் கேக்கவில்லையோ..!!

எமன் என்னும் அரக்கன்
செல்போன் வழியாக உன்னை
இழுத்து கொண்டானோ, இரண்டு
மாதத்தில் திருமணம், ஆனால் நீயோ
ரத்த வெள்ளத்தில் சடலமாக..!!

ஏன் நடந்தது இந்த கொடுமை,
எதற்காக, புரியாமல், தவிப்போடு,
என்னோடு உன் நினைவுகள்
மட்டுமே நிரந்தரமாக..!!

எழுதியவர் : Kilora.A (4-Nov-11, 4:19 pm)
பார்வை : 662

மேலே