உயிருடன் கலந்து விட.....

வார்த்தையாய் காத்திருக்கிறேன்
உன் சொற்களில் இருந்து வெளிப்பட

காற்றாய் காத்திருக்கிறேன்
உன் சுவாசத்தில் கலக்க

இமைக்காமல் காத்திருக்கிறேன்
என்றும் உன்னை பார்த்து ரசிக்க

புன்னகையாய் காத்திருக்கிறேன்
உன் இதழ்களில் தவழ

கரையாய் காத்திருக்கிறேன்
அலையாய் நீ தொட

உயிராய் என்றும் காத்திருப்பேன்
உன் உயிரில் என் உயிர் கலந்து விட

எழுதியவர் : கவி (4-Nov-11, 3:30 pm)
பார்வை : 324

மேலே