வெற்றி-தோல்வி உரையாடல்
ஓர் பொன்மாலை பொழுதில்
வெற்றியும் - தோல்வியும்
சந்தித்தன!!
வெற்றி ஆனவத்துடன் குரல்
எழுப்பியது...
ஏ! தோல்வியே....
இன்னுமா நீ இவ்வுலகில் உலாவுகிறாய்??
முதலில் எங்காவது ஓடிவிடு....
மானிடர் அனைவரும்
இன்றும் - என்றும் தேடுவது
என்னை மட்டுமே!!!
உன்னை தேடும் மானிடர்
அனைவரின் முதல் சந்திப்பு என்னிடமே!!!
அவரிடம் நீ கேள்
என் முதல் நண்பன் தோல்வியே என்பார்கள்!!
அதுமட்டுமா...
எனது....
""வெற்றிக்கு முதற் படியே
என் முதல் தோல்வி தான்""
என்பார்கள்...
இப்பொழுது தெரிந்துகொண்டாயா
மனிதருக்கு முதலில் தேவை யார்??
என்பதே -தோல்வியின் பதில்!!
வெற்றியோ
வெட்கி தலைகுனிந்தது...
என்றாவது மகிழ்ச்சி தரும்
என்னை விட....
வாழ்கை பாடங்கங்களை உணர்த்தும்
நீயே மனிதருக்கு அவசியம்...
ஒப்புகொள்கிறேன் நண்பா...
வெற்றி- என்னைவிட
தோல்வி - நீயே சிறந்தவன் என்று!!!!
தோல்வியோ - இல்லை நண்பனே
என் அனுபவங்களை மனிதன்
பெறுவதே- நீ...
தரும் மகிழ்சிக்காக தானே!!! என்றது...
ஐயகோ!!!
பெரியவன் நான் அல்ல...
தன்னடகத்துடன்- வெற்றி!!!
மறுமொழியாக தோல்வி...
நன்றாக கேட்டுகொள் நண்பா...
"" வெற்றி- நீயும்
தோல்வி- நானும்""
மனிதருக்கு என்றும் சமமே!!!!
உண்மையை உணர்தேன்
என் ஆனவத்தை அழித்த நண்பனே நன்றி....
நீ மட்டுமல்ல -உன்னை
அடையும் மனிதரும் எதை
உணரவேண்டும்....
என்பதே தோல்வியின் விருப்பம்!!!!
வெற்றி-தோல்வியிடம்...
சரி நண்பா...
என்னை ஓர் மானிட நண்பன் அழைக்கிறான்...
உன்னிடம் விடைபெற்று
அவனுக்கு-உண்மையை உணரவைக்க
சென்று வருகிறேன்...
மீண்டும் சந்திப்போம்!!!!