ஒன்றாய் இருந்த பள்ளிநாட்கள்

பிறந்தநாள் வைபவங்கள் கொண்டாடி மகிழந்தது
பிறவியின் பயனையே ஒருமுறை உணர்ந்தது
ஒற்றை உணவையும் பத்துகைகள் பறித்தது
ஒழுகும் குடைகுள்ளும் குழுவாய் சென்றது
பாதிவேளை பாடத்தினை உணவகத்தில் களித்தது
மீதிவேளை மைதானத்தில் மண்டியிட்டு கிடந்ததது.........

கற்றுத்தந்த ஆசானுக்கு பட்டங்கள் கொடுத்தது
கண்களிலே படாமல் கூச்சலிட்டு உரைத்தது
நண்பர்கள் இணைந்து பாடல்கள் பாடியது
சந்தமில்லா பாடலுக்கும் தாளங்கள் தட்டியது
மேசைப் பலகையில் கிரிக்கெட் அடித்தது
தண்டனை அடியையும் சமமாய் பகிர்ந்தது.........

சாலையில் காதலிக்கு சாடைக்கண் அடித்தது
இரட்டை ஜடைக்குள் இதயத்தை தொலைத்தது
வகுப்பறை சுவரினில் கவிதைகள் செதுக்கியது
பெயருடன் பெயர் சேர்த்து ஓவியமாய் கிறுக்கியது
தாவணி தேவதைக்காய் தாடியும் வளர்த்தது
நண்பனின் காதலுக்கு நாம் கண்ணீர் வடித்தது......

பலநேரம் பரிட்சையில் பார்த்து எழுதியது
சிலநேரம் அதையெண்ணி மனதுக்குள் சிரித்தது
ஒரு சிறு வெற்றிக்கும் ஓயாமல் உழைத்தது
சிறு சிறு தோல்விக்கும் கலங்காமல் ரசித்தது
நட்பெனும் நூலினால் கோர்கப்பட்டிருந்தது
பாசம் என்னும் பள்ளியிலே சிறைபட்டு கிடந்தது....

நாம் ஒன்றாய் இருந்த பள்ளிநாட்கள்
என்றும் உதிரா நினைவுப் பூக்கள்......









எழுதியவர் : சோபன்[ரியல் ஹீரோ] (11-Nov-11, 10:32 am)
பார்வை : 932

மேலே