"நண்பர்கள் துணையோடு காதல் கடிதம் என் காதலிக்கு"


கவிபாட தெரியுமா என்று கேட்ட
காதலிக்கு தெரியபடுத்தும் முயற்சி...........
======================================

அன்பே...

துக்கமாய் தவிக்கிறாயா
என் தங்கமே தூங்காமல்....
தாலாட்டு கவிப்பாட
ஐயா கன்னியப்பன் கவிதைகள்
என்னோடு உள்ளது....

சங்க காலத்து காதல் முதல்
எங்க காலத்து காதல் வரை
சஞ்சரிப்பதை காண வேண்டுமா
சங்கடம் கொள்ளாதே ஐயா
சங்கரன் கவிதைகள் சகலமும் செய்யும்.....

காதலின் மெல்லிசையாய்
கருத்துக்களின் கருவிடமாய்
காலத்தின் பெட்டகமாய்
மூச்சுகாற்றைகூட மூங்கிலிசையாய்
மாற்றும் முற்போக்குக்காரன்
இவனது ஒவ்வொரு செற்களிலும்
அர்த்தமுள்ள ஆயிரம் சொற்கள் அரங்கம் அமைத்து அமர்ந்திருக்கும் ஆச்சர்யமூட்டும்
ஆச்சர்யக்காரன் கவிதைகள் கூட காதல் கொள்ளும்
கவிதை காதலன் ஈஸ்வரன் உண்டு என்பக்கம்...

அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுற்றும் உலகம் கூட
தலைசுற்றி கீழே விழும் இவள் கவிதை
படித்தால், எங்கள் நட்பு வட்டாரத்தில் சுற்றும்
முழுமதி எங்கள் வளர்மதி......

உன் கண்களைமூடி பிரிந்துபோன உன் காதலியை
நினைத்துப்பார், ஒரு கனம் புன்னகை செய்வாய்
-----நல்லவேளை தப்பிச்சிட்டோம் என்று------
இப்படி யதார்த்த கவிதை எத்தனை வேண்டும் சொல், நகைச்சுவையிலே நாட்டு நடப்பை சொன்ன
காதல் நாத்திகன் என் அண்ணன் மோகன் தாஸ்
கவிதை படித்துவிட்டுசொல் என் மேல் உனக்கு மோகம் வந்ததா இல்லையா......

இதுமட்டுமல்ல வேற்று நாட்டு வேடந்தாங்கல்
அன்னை நாட்டை மறக்காத அன்பு,
ஆயுள் முழுவதும் தொடரும் பண்பு,
ஈடு கொடுக்காது இவளது பாசம்
போடத்தெரியாது இவளுக்கு வேஷம்,
கவிதை காதலர்க்கு படைக்கும் தினம் விருந்தா
அவள் தான் எங்கள் பிரிந்தா....

கவிதை காட்டில் நிற்கும் எனக்கு
கவிதையில் கொடுக்க தெரியாதா கடிதம் உனக்கு...

எல்லாவற்றிற்கும் மேலாக,

பார்த்ததில்லை, பழகியதில்லை,
சரியாக பேசியதுகூட இல்லை,
கற்பனை கருவில் ஊறிய
கவிதைகள் பெத்துபோட்ட
நட்பெனும் குழந்தையை
கொண்டுவந்திருக்கிறேன் ஆயுதமாக,
உன் அன்பு கிடைக்குமா எனக்கு ஆயத்தமாக......

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (11-Nov-11, 7:18 pm)
பார்வை : 497

மேலே