சுகமான சுமை உன் நட்பு
பிரிவு என்பது இன்று மட்டுமல்ல
வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும்
உலா வரும் உந்தன் நிழலே!
நட்பினை பிரிவது அழுவதற்கல்ல
சுகமான சுமையினை சுமப்பதற்கே!
மணமனாலும் மனம் மாறிவிடாது
என் அன்பு என்றென்றும்
உன்னை தொடரும் தேய நிலா!
கால சக்கரங்கள்
உருண்டோடினாலும்
கடந்த கால இன்பங்கள்
நினைவுகளாய்
அலைமோதுகின்றபோது
மனமே! உனக்கேன் வருத்தம்?
நட்பினை பிரிவது அழுவதற்கல்ல
சுகமான சுமையினை சுமப்பதற்கே!