மழலையின் முத்தம்


ஓரிரு பற்கள் பொக்கை வாய்
மத்தாப்பு சிரிப்பில்
உள்ளம் கொள்ளை போகுதடி

ஆப்பிள் கன்னத்தின்
அந்தக் கன்னக் குழிவினில்
என் நெஞ்சம் வானில் பறக்குதடி

பிஞ்சு கரங்கள் மேனியில் படும்போது
என் நெஞ்சில்
குழலும் யாழும் ஊர்வலம் போகுதடி

அள்ளி அணைக்கையிலே
கன்னத்தில் நீ தரும் முத்தத்திலே
என் மனம் உன் மத்தம் ஆகுதடி

மங்கை வடிவினில் வந்த மாதவமே
எழுத முடியாத என் சித்திரமே
மழலை அமுதமே
உன்னை அன்றி வேறு உலகம்
எனக்கில்லையடி

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-11, 8:29 am)
பார்வை : 927

மேலே