முதல் பார்வை. . .

உன் முதல் பார்வையிலேயே வீழ்ந்தேன்
என்று சொல்லலாம் . . .
யாரிடமும் இல்லாத ஓர் வசீகரம் . . .
முன் எப்போதுமில்லாத உணர்வு. . .
இத்தனை மாற்றங்களும். . .
நொடிப்பொழுதில் நீ வீசிச் சென்ற பார்வையால் . ..

பார்த்தவுடன் பற்றிக்கொண்ட
விழிகளைவும் . . .
மின்னலென வெட்டிச் சென்ற - உன்
கண்களின் அசைவைவும்
தேடி அலைகிறேன். . .

என்றோ ஒருநாள். . .என்னை
கிரங்கவைத்த விழிகளை காண்பேன். ..
அதுநாள் வரை - உன்
நினைவுடன் தேவி . . .

எழுதியவர் : தேவி (15-Nov-11, 9:01 am)
Tanglish : muthal parvai
பார்வை : 296

மேலே