மனைவியின் ஏக்கம் ... ( 18 + )


ஆனந்த நிலவு தோன்றும் காலிரவு நேரம்..
சாரல் மழை தூவும் சாந்த பனி காலம்..
என் விழியின் ஜன்னல் ஓரம்
நான் நிற்கிறேன்..உன் வருகைக்காக..

உன் மூச்சு காற்று உரசலுக்காக...
உன் வாசம் நுகரத்தானே ..
உன் எண்ணம் நெஞ்சில் நிரம்பி..
காதல் வழிந்து காத்திருக்கிறேன்..

ஒரு போர்வைக்குள்ள சிறு மேகம் போல
ஒன்றாய் மிதந்திட ஆசை உண்டு.
நெருங்கிய அணைப்பில் தீயாய் சுடுவது
தேகம் மட்டுமல்ல .. ஆசையும் தான்.. என் அன்பே...

மூக்கும் உரச..மூச்சும் கலக்க...
கண்கள் பேச..காம கவிதை பிறக்குதே..
உதட்டில் ஏக்கம்.. பிரிய தயக்கம்..
சேர்ந்த உதடு பிரிய மறுக்குதே...ஏன்? அன்பே..

கால்கள் பின்னிட , கைகள் இறுகிட..
நெருக்கம் இருக்கிட... நொறுங்கினேன்..
அணைப்பில் அணைந்தேனே .. ஆடை அணியேனே..
அன்பே உன்னில்..அடைக்க்கலாமாகிறேன்.. என் அன்பே..
.
உந்தன் உரசலில் உலகம் மறந்ததே..
ஊமையாகிறேன்..
உறக்கம் தொலைக்கிறேன்..
உரிமை கேட்கிறேன்.. வா அன்பே..

உன்னிடம் நிறைய பேசணும்..
ஒண்ணா உருண்டு புரளணும்..
ஒரு டஜன் புள்ள பொறக்கணும்
என் உரிமை கேட்கிறேன்.. உன்னிடம்.. வா அன்பே..

காதலில் புலம்புறேன்..
கவிதையாய் நிற்கிறேன்..
உனக்கென காத்திருப்பேன்..
காத்திருப்பது.. கலந்திட தானே.. சீக்கிரம் வா அன்பே..

எழுதியவர் : கலிபா சாஹிப். (15-Nov-11, 2:41 pm)
பார்வை : 20126

மேலே