பக்கத்து வீட்டு அக்கா

அப்போது எனக்கு வயது தொடங்கிய நேரம்
உனக்கோ ஆறு வயது தொடர்ந்த நேரம்....
மெல்ல நான் தவரயில்
என்னோடு தவர்ந்த
உன் கால்கள்....
மெல்ல நான் சிரிக்கையில்
துள்ளி சிரித்து என்னை
அள்ளி கொள்வாய்....
மெல்ல நான் அழுகையில்
கோமாளியாக மாறும்
உன் முக பாவனை...
இதெல்லாம் அம்மா சொல்லி நான் அறிந்தவை....
அப்போது நீயும் குழந்தை தான்
என்னை நீ எப்படி பார்த்திருப்பாய்
குழந்தையாகவா இல்லை
விளையட்டு போம்மையாகவா.?..
எனக்கு ஆறு வயதை தொட்ட போது
உனக்கோ என்னை விட இரண்டு மடங்கானது....
கண்ணாம் பூச்சி முதல்
பல்லாங்குழி வரை
நீ கற்று கொடுத்த விளையாட்டு....
பத்து காசு முதல்
பத்து ரூபாய் வரை
நாம் சேர்த்த உண்டியல் காசு....
பொன் வண்டு முதல்
வண்ணத்து பூச்சி வரை
ஒன்றாய் நாம் பிடித்தவை....
குளக்கரை
படித்துறை முதல்
பட்டினத்தார் திண்ணை வரை
நாம் ஒன்றாய் விளையாடிய இடங்கள்....
தெரு முழுக்க
நாம் ஒட்டிய
மிதி வண்டி சக்கரம்....
திருவிழா வளையல்
உனக்காக நான் எடுத்தால்
முருகன் டாலர்
எனக்காக நீ எடுப்பாய்....
அருணா கயிறு முதல்
அத்தனையும்
நீ தான் கட்டி விட்டதாய் நினைவு.....
மெல்லாமல் தின்ன
பொங்கல் கரும்பு
நீ கடித்து கொடுப்பாய்....
அம்மா மடியை விட
உன் மடியே
எனக்கு ஆறுதல் அதிகம் சொல்லும்....
நம் உலகம்
நன்றாய் தான் சென்றது....
அப்போ
கால் சட்டை பருவத்தில் நான்
நீயோ தாவணி பருவத்தில்.....
நாமகான பிரிவு
அங்கேதான் தொடங்கியது....
ஏனோ தெரியவில்லை
உன் விளையாட்டுத்தனம் குறைந்தது
வயதின் மாற்றமென்று
அப்போது தெரியாது எனக்கு....
எப்போதும் சுருசுப்பாய்
ஓடி திரியும் உன் கால்கள்
வீட்டுக்குள்ளையே முடங்கியது.....
இதுதான் பெண்ணகளின் நிலை
எனக்கு புரிய நாள் ஆனது.....
இப்போது நீயோ
இரண்டு குழந்தைகளோடு.....
நினைத்து கொள்வேன்
என்னை போல் தான்
உன் குழந்தைகளையும்
பார்த்து கொள்வாய் என....
இப்போதும்
என்னை பார்க்கும் போது
குழந்தையெனவே
கொஞ்சி கேட்பாய்
தம்பி எப்படி டா இருக்க.?...
இன்னும் உனக்கு நான்
குழந்தைதான் அக்கா....
சில நிமிடம் தோன்றும்
நாம் அப்படியே இருந்திருக்க கூடாதா.?...
எங்கோ தொலைத்துவிட்டோம்
நாமக்கான குழந்தை பருவத்தை....
அதை நினைத்து பார்கையில்
குழந்தையென அழத்தான்
செய்கிறது என் மனம்.....