பாசம் எப்படி வரும்.?...

மடி கறந்த பாலையும்
பரி கொடுத்து
கண்ணீர் விட்டது பசு மாடு
மண்ணை தின்று
பசியாறியது கண்ணு குட்டி
அழகு கெடுமென்று
தாய் பால் மறுத்து
மாட்டு பால் கொடுக்க
குழந்தையும்
உதைத்து கொண்டே குடித்தது
பாசம் எப்படி வரும்.?....