பெண்மையின் வடிவம்

பெண்மையின் வடிவம்
அவள் கண்மையை கொண்டு
மட்டுமே அதை தீட்ட முடியும்

பெண்மையின் மணம்
அவள் முந்தியில் வீசும் அவளது சுவாசம்

பெண்மையின் பேச்சு
அவளை சுற்றி இருப்பவர்களின் முச்சு

பெண்மையின் மனம்
என்றுமே யாருக்கும் புரியாத புதிர்

பெண்மையின் காதல்
அவளது அச்சத்தோடு கூடிய வெட்கம்

பெண்மையின் இரக்கம்
தன்னை துன்புறுத்துபவரிடம்

பெண்மையின் கோபம்
தன்னை சேர்ந்தவர்களை துன்புறுத்துபவரிடம்

வார்த்தையின்றி எழும் அவள் நாணம்
இது பெண்மையின் முச்சு.......

எழுதியவர் : (21-Nov-11, 4:23 pm)
பார்வை : 310

மேலே