இந்தியா ஒளிர்கிறது.........???
இந்தியா ஒளிர்கிறது
42 கோடி மக்கள்
வயிறு பசியால்
பற்றி எரிகிறது -அதனால்
இந்தியா ஒளிர்கிறது
காஷ்மீரில் தினம்தினம்
நூற்றுகணக்கான விதவைகள்
கதறி அழுகின்றனர்- அதனால்
இந்தியா ஒளிர்கிறது
12 ஆண்டுகளாய்
மக்கள் விடுதலைக்காக
மணிப்பூரில் இர்ரோம் சர்மி
இன்றுவரை உண்ணாவிரதம்
இருக்கிறார்,அதைகண்டும்
உண்டுண்டு வாழ்ந்து வருகிறார்கள்
ஆதிக்க வெறிபிடித்த மனிதர்கள் -அதனால்
இந்தியா ஒளிர்கிறது
பன்னாட்டு நிறுவனங்கள் பளபளக்க
பணக்காரர்கள் கூத்தடிக்க
மின்னுகிறது மின்சாரம் ;
அவர்கள் இடத்தில் மட்டும் ,
அப்பாவி பொதுமக்கள் இருக்கும்
வீட்டினில் மட்டும் பெரும்பாலும்
இருளினிலே - அதனால்
இந்தியா ஒளிர்கிறது
அந்நிய நாடுகளுக்கு
அணுகுண்டு தயாரிக்க
கையுட்டு வாங்கி கொண்ட காரணத்தால்
அப்பாவி பொது மக்கள்
அழிந்தாலும் பரவாயில்லை என்று
அணு உலை திறக்கின்றனர்
மின்சாரம் தயாரிக்க
என்ற பெயரில் -அதனால்
இந்தியா ஒளிர்கிறது