தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்
வாசிப்பது '' ஈஸ்வர் தனிகாட்டு ராஜா ''

அரசு மருத்துவமனைகளில்
புதிய மருத்துவர்கள் நியமனம்

சுடுகாட்டு கொட்டகைகள் அமைத்தல் மற்றும்
மயானம் விரிவு படுத்தும் பணிகள் தீவிரம் அரசு அறிவிப்பு

விச சாராயம் அருந்தி
விருதுநகரில் 15 பேர் பலி

மேலும் 100 மதுக்கடைகள் நாடுமுழுவதும்
திறக்க அரசுமுடிவு

பேருந்து கட்டணம் உயர்வு
பொதுமக்கள் அவதி

பேருந்து பயணசீட்டு பரிசோதகர் பதவிக்கு
பதிவு மூப்பு அடிப்படையில்
பணிநியமன ஆணைவழங்க அரசு உத்தரவு

''சாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி ,உயர்ச்சி சொல்லல் பாவம் ''
என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி
குழந்தைகள் தினவிழாவில் தலைவர் ஆவேசபேச்சு

நாளை மறுநாள் நடக்கவிருக்கும்
89 வது சாதிக்கட்சி மாநாட்டிற்கு அலைகடலென திரண்டு வருமாறு தொண்டர்களுக்கு அழைப்பு
தலைவர் வேண்டுகோள்

இன்று போல் என்றும் மின்வெட்டு இல்லாத தமிழகம் அமைப்போம் அமைச்சர் பேச்சு

ஒரு நாளைக்கு 20 மணிநேர மின்வெட்டை
கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

லஞ்சம் வாங்குவோரை தடுக்க
தலைமை காவல்துறை அதிகாரி தலைமையில்
''புதிய காவல் படை ''

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில்
காவல்துறை உயர்அதிகாரி கைது

இன்றைய தலைப்பு செய்திகள் நிறைவடைந்தன விரிவான செய்திகள் நாளை காலை 7 /30 மணிக்கு

''எழுத்து செய்திகளுக்காக ''
நாகர்கோவிலில் இருந்து
'' ஈஸ்வர் தனிகாட்டு ராஜா ''
வணக்கம் எழுத்து நண்பர்களே !

எழுதியவர் : மோகனதாஸ் காந்தி (22-Nov-11, 11:43 pm)
பார்வை : 784

மேலே