திங்கள் காலை
கோபங்களின் மொத்த வெளிப்பாடு திங்கள் காலைதான்!
சாபங்களின் மொத்த கூப்பாடு திங்கள் காலைதான்!
மனிதனுக்கு சாபமாய் வந்த நேரம்!
விடியலால் மனிதனை விரட்டிடும் சோகம்!
இந்த காலைபொழுது எழுந்துகொள்ள மனமில்லை
எழுந்தாலும் படுக்கையறை என்னை விடுவதில்லை!
நொடியை கடத்தும் அந்த கடிகாரமுள்
எனக்கு எதிரியாகி தான் போகுதே!
நேரம் ஆகவில்லை மனதைத் தேத்திக்கொண்டு
தலை மீண்டும் போர்வைக்குள் போகுதே!
வேறு வழியின்றி என் மனமின்றி
அம்மாவின் அர்ச்சனைப்பூக்க்ள் உதிர எழுந்துவிட்டேன்!
அவசரத்தின் மொத்த உருவமும் இனித்தாண்டவாடும்!
வெந்நீர் ஊற்றிய கால்களா!
சக்கரம் கட்டிய கால்க்ளா!
ஓயாமல் ஓடுகிறதே என்கால்கள்!
இட்லின் வாசனை ஒருப்பக்கம் இழுக்க!
நேரத்தின் கைகள் ஒருப்பக்கம் தடுக்க!
வாசனை மட்டும் பிடித்துக்கொண்டு!
வாசற்படி தாண்டிவிட்டேன்!
அழுவலகப் பேருந்துக்கும் அவசரம் போல!
என்னை தனியே விட்டு போனது!
இறுதி நம்பிக்கையான அரசு போக்குவரத்துக்கழகமும்!
என்னை கை விட்டுப் போனது!
ஏதோ ஏதோ உதவியுடன்
ஒருவழியாக அழுவலக வாயிலை அடைந்துவிட்டேன்!
இந்த திங்கள் காலைப் போராட்டம் முடிந்தது!
போராளியாக ஒவ்வொருவாரமும் இதைத் தொடரவேண்டுமே!