உழவனும் ஒரு கவிதையும்

என் உழுகாத நிலத்தை
கொஞ்சம் உழுது
கொடுத்தது மண் புழு....

மின்சாரம் இல்லாத
என் வயலுக்கு
மின் விளக்கு சுமந்து வந்தது
மின்மினி பூச்சிகள்....

வாய்க்கால் நீர் குடிக்க
செழிந்து வளர்ந்தது
வரப்பு புற்கள்....

வாழை
குலை தள்ள
வளைந்த போது
தோல் கொடுத்தது
தாங்கி கொண்டது மூங்கில்....

மல்லிகை வாசத்தில்
வசப்பட்டு நின்றது
தென்றல்
என் தோட்டத்திலேயே....

ஈசானி மூளை
கருக்கும் வேளை
இருள தொடங்கியது என் தோட்டம்
மழை பெய்ய போகுதுன்னு
வானிலை அறிக்கை சொல்லிக்கொண்டே
இடம் பெயர்ந்தது எறும்புகள்....

மண் ஈரம்
காய்ந்து
மழை ஈரம் அதை
நனைத்த போது
மண் வாசம் ஊரையே ஈர்த்து....

நெல் முற்றியது
அறுவடைக்கு
குடும்பத்தோடு வந்தது
தோகை மயில்....

சோள கதிர் பரியும் நேரம்
தண்ணீர் இல்லாமல் வறண்ட போது
என்னைவிட சோகத்தில் இருந்தது
கிளிகளும் அணில்களும்....

என் குப்பை மேடு
பாட சாலையானது
பாடம் சொல்ல தாய் கோழி
குப்பை கிளற
கற்று கொண்டது
சில கோழி குஞ்ச்சுகள்....

இது என் வாழ்கை
இயற்கையோடு நான் கற்றுகொண்டது

இது இல்லாமல்
இல்லாமையையும் தினம்
கற்றுக்கொண்டுதான் உள்ளேன்...


வியர்வை விலை
கொடுத்து
நான் விளைவிதை
என் தோட்டத்து
விலை பொருட்கள்
எவனோ விலை சொல்ல
வறுமைக்கு விற்று
வெறும் கையேடு திருப்புவேன்....

கீரை விலை கேட்டு
கிழங்கு சிரித்தது
கிழங்கு விலை கேட்டு
காய்கறி சிரித்தது
காய்கறி விலை கேட்டு
பழ வகை சிரித்தது
இப்படி எல்லாம் சிரிக்க
என்னை பார்த்து சிரித்தது ஏழ்மை....

நாகரீக மோகத்தால்
தொழில்கள் பல வந்து
தோற்க்கடிக்கப்பட்ட நிலையில்
வறுமை பிடியில்
என் வாழ்க்கை சென்றாலும்
மார்பு தட்டி சொல்வேன்
உலகிற்கே உணவளிக்கும்
விவசாயி நானென்று....

எழுதியவர் : பாலமுதன் ஆ (23-Nov-11, 8:09 am)
பார்வை : 280

மேலே