இறந்த தந்தை சொல்வதை கேளுங்கள்

அழுகிய எனது
அங்கத்தை துடைத்தாள்...!
அம்மணமான எனது
அருவருத்த மலம் கழுவினாள்..!
கண்களில் பூளைகளையும்...
கசியும் சீல்களையும்....
மனைவியே வெறுக்கும்.....
அவயங்களை எல்லாம்....
அகமோ முகமோ சுளிக்காமல்
என் அன்பு மகள் கழுவி எடுத்தாள்.......!
என் அம்மாவை மிஞ்சியவள்..நீ....!
இறந்து போய் விடுகிறேன் அம்மா..
இனி உனக்கு துன்பம் வேண்டாம்...!
அவளை கொஞ்சம் கூப்பிடுங்கள்
அவளே எனக்கு கொல்லி போடட்டும்...!

எழுதியவர் : (23-Nov-11, 8:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 260

மேலே