ஓடிப்போனவள்
அம ஆமா அம்மா என்பதே
உலகில் ஜீவிக்க பிறந்த குழந்தை பேசும் முதல் வார்த்தை
நானும் அப்படிதானே
என் மொழி பேச தொடங்கினேன் உன்னால் அம்மா
பெண் பிள்ளை பெற்றால்
வருந்தும் மக்கள் மத்தியில் சீராட்டி பாராட்டி என்னை வளர்த்தவளே
பள்ளி செல்லும் வயதில் எனக்கு தோழியானாய்
படிக்கும் பொழுதில்
ஆசானாக மாறி எனக்கு உதவிய படிக்காத மேதை நீ அம்மா
உன்னை பார்த்து பார்த்து வளர்ந்தேன் உன்னை போலவே வளர்ந்தேன்
பள்ளி படிப்பும் முடிந்து கல்லூரி பயணம் தொடர்ந்தது
உன் கைக்குள் இருந்தவள் மெல்ல உலகத்தை பார்க்கலானேன்
பருவம் செய்த சதியா பாவி இவள் மனதில் காதல் புகுந்தது???
சந்தித்தேன் ஒருவனை
ஏனோ தெரியவில்லை அவன் செயல்களில் எல்லாம் நீயே தெரிந்தாய்
பிடித்து போனது அவனை
அதனால் தொலைந்தது மனது
நானே முடிவு செய்து விட்டேன் மணமகனை
பெற்றவளே உன்னிடம் மனதின் ஆசைகளை சொன்ன நேரம்
எது தடுத்தது உன்னை
தடை போட்டாய் என் நேசத்திற்கு
பொறுமை காத்தேன் உன் மனம் மாறும் என்று
பிடிவாதத்தை மொத்தமாய்
குத்தகைக்கு கொண்டுல்லாயோ என்னவோ
என் மனம் உனக்கு புரியவில்லை
உன் சம்மதத்திற்கு காத்திருந்து
ஏமாந்த நான் பதிவு திருமணம் புரிந்து கொண்டேன்
உனக்கு சொல்லாமல்
அம்மா
உன்னை மறக்கவில்லை நீ என்னை வெறுக்காதே என்று காகிதத்தில் விடை பெற்று கொண்டு
ஆண்டுகள் பல ஓடிவிட்டன
ஆனால் இன்னும் கங்கை கரை சேரவில்லை கங்கை நதி
நீ உயிர் தந்த உன் சிறு உயிரான என்னை
என் மூச்சு அடங்கும் முன் அணைப்பாயா
உன் இருகரம் நீட்டி???