காதல் சமுத்திரம்

காதல் சமுத்திரத்தில்
கலந்திட துடிக்கும்
சிறிய மழைத்துளி நான் ....

சிப்பிக்குள் விழுந்து
முத்தாக விரும்பினேன் ....

இன்று கடலில் கலந்து
கண்ணீரே கரிக்கிறேன் ........

என்னை இங்கு
விழ செய்தது
யார் குற்றம் ..?...?

எனை பொழிந்த
மேகத்தின் குற்றமா ....?
மேகத்தை பொழிய வைத்த
குளிர் குற்றமா ..?

காற்றை அனுப்பிய
கடவுளின் குற்றமா ?
கடவுளுக்கே காதல் சொல்லும்
உனது கண்களின் குற்றமா ..?

நான் அறியேனடி ............
நான் அறிந்தது ஒன்று தான்
அது நீதான்


எழுதியவர் : LAKSHMI (17-Aug-10, 10:22 pm)
சேர்த்தது : lakshmi
பார்வை : 402

மேலே