மெல்லிசை ஒலிக்கிறது....
அதிகாலை நேரம் ,
விடியல் என்னை எழுப்பியது
உறங்கி கிடந்த நான்
சிரமப்பட்டு எழுந்திருக்கிறேன்
கையில் தேனீருடன் அம்மா
அன்பின் நிரந்தர அடையாளம்; -என்றுமே
அம்மாதான் எனக்கு மட்டுமல்ல , எல்லாருக்கும்
மெல்லிசை ஒலிக்கிறது
கணத்த என் இதயம் -மெல்ல
மெல்ல கரைகிறது -இசையில்
நேற்று பட்ட அவமானங்கள்
நாளையை வெகுமானதிற்கு என
இன்று உணர்கிறேன் - இசையில்
எனது நீண்ட நெடுந்தூர பயணம்
இப்படியே போகுமோ - என
நான் அஞ்சுகையில் -இல்லை
உன்னுடன் எப்போதும் என்றது இசை
தனிமையின் இன்பம் உணர
தனிமையின் துன்பம் உணர
என்னை நான் உணர தேவை இசை
ஏனோ தெரியவில்லை ,இசையென்று ஒன்று
இல்லையெனில் என்னவோம் நாம் -என்று
என்ன தோன்றியது இன்று ;
இசை இல்லையெனில் எதுவுமில்லை
ஆம் எதுவுமில்லை ,யாருமில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை
தேவை படுகிறது இசை -நாம்
விரும்பினாலும் ,விரும்பாவிட்டாலும்
பிறந்த குழந்தையின் அழுகையாய்
பெற்ற தாயின் பூரிப்பாய்
உறவுகளின் மகிழ்ச்சி குரலாய்-வாழ்வில்
ஆரம்பமாகும் இசை
நாம் வளர வளர ,சூழல் மாற மாற ,
மாறுகிறது நம் தேவைகள் -நம்
தேவைகேற்றார்போலவே -நாம்
தேடிகொள்கிறோம் நமக்கான இசையை ;
பள்ளி பருவத்தில் பெரும்பாலும்
துள்ளலிசை கேட்டே வளர்ந்தோம் நாம்
திரைப்படம் பார்த்து பார்த்து- நாம்
பழகிய இசையே நமக்கு
இசையாய் பட்டது அப்போது;
பள்ளி பருவம் முடிந்து
கல்லூரி பருவம் வந்தது
கூடவே காதலும்தான் .....என்ன காரணமோ
காதல் வந்தாலே உடன் வந்து நம்மை
தொற்றிகொள்வது மெல்லிசைதான்;
மெல்லிசை மட்டும் எல்லோருக்கும்
பிடிக்கும் என நம்புகிறேன் -காதலைப்போலவே
காதல் னா சோகம் இல்லாமலா; சோகமான இசை
சுகமாகும் அப்போது ....
பிறகு ,மெல்ல மெல்ல பயணிக்கிறோம்
நம் வாழ்க்கை பயணம் நோக்கி ..
அந்த பயணத்தில் நாம் பெரும்பாலும்
மறந்தே போகுறோம் இசையை
ஆனாலும் இசை நம்மை மறப்பதே இல்லை
நாம் எங்கே இருந்தாலும்
நாம் எப்படி இருந்தாலும் -உடன் வந்து
நம்மை நாமாகவே வைத்துகொள்கிறது-இசை;
துள்ளளிசையோ ,மெல்லிசையோ
எனக்கு எப்போதும் அது தேவை,
ஏனெனில் நான் -பயணிக்கிறேன்
பயணிக்கிறேன் ,பயணிக்கிறேன்
பயணித்துக்கொண்டேருக்கிறேன்
பாதைகள் முடியும் வரை ....
எனக்கு [நமக்கு]தெரியும் அந்த உண்மை
பயணங்கள் முடிவதுண்டு ,
பாதைகள் முடிவதல்ல... இசையைபோலவே;
மெல்லிசை ஒலிக்கிறது
கணத்த என் இதயம் -மெல்ல
மெல்ல கரைகிறது -இசையில்
;

