கனவுகளில் வாழ்வோம்
எல்லாமும் கனவுகளாகினும்
கனவுகளுக்குள் வாழும் வரை
கவலையில்லை இங்கு
எல்லாமும் ஒரு நாள் கனவுகளே
மேகங்களின் நிறங்களும் உருவங்களும்
மாறுதல் போல் காட்சிகள் விரைகின்றன
நினைவுகள் எனும் கனவுக்குள் நாம்
வாழும் வரை இங்கு எல்லாமும் சுகமே