மனிதா ஏனிந்த மனமாற்றம்

காதல் என்பது தெய்வீகம்
சாகத் துணிந்தால் பரலோகம்
ஆவி சுற்றும் நரகத்தில்
பேயாய் பிசாசாய் அலையவரும்
காதல் பரிசா? தற்கொலைகள்? - அல்ல
கோழைகள் செய்யும் விளையாட்டா?
மனிதா ஏனிந்த மனமாற்றம்?
எதனால் இந்த தடுமாற்றம்?
மறந்து வேண்டாம் தற்கொலைகள்.

கடனால் தொல்லையும், காதல் தோல்வியும்
தற்கொலையாலே தீர்ந்திடுமா?
வயிற்று வலியும் வறுமைவாழ்வும்
தற்கொலையாலே போய்விடுமா?
கணவன் மாமி கொடுமைகள்
தீயில் எரிந்தால் ஓய்ந்திடுமா?

தோல்வியெல்லாம் வெற்றிப்படியாய்
கொள்வாயானால் துயர் எதற்கு?
பிணியைப் போக்க மருத்துவர்கள்
தினமும் அரசில் பணியாற்ற
ஆயிரமாயிரம் மருந்துக்கடை
ஓயாபணியில் காவலர்கள் எல்லாம்
உனக்காய் இருக்கையிலே பூச்சிமருந்தை
குடிப்பாயோ? கோழையாக இருப்பாயோ?

நிம்மதி தேடி தற்கொலையை?
நிம்மதியாக நீ செய்தால்
நிம்மதி வருமோ உனக்கேதான்?
நிம்மதியின்றி அழுவார்கள்
நிம்மதி இழந்த உன் குடும்பம்
தெருவினில் நின்றே தடுமாறும்
ஊரார் உறவார் பழித்திடுவார்
நண்பர் சுற்றமும் இகழ்ந்திடுவார்
பொன்னும் பொருளும் இழந்திட்டால்
பேணி நாளும் மீட்டிடலாம்
இறைவன் கொடுத்த உயிரல்லவா!
மறைகள் போற்றும் கொடையல்லவா
மனிதா ஏன் இந்த மனமாற்றம்?
எதனால் இந்த தடுமாற்றம்?
மறந்தும் வேண்டாம் தற்கொலைகள்
வெறுப்போம் ஒழிப்போம் தற்கொலையை...............

எழுதியவர் : (29-Nov-11, 1:58 pm)
சேர்த்தது : hane
பார்வை : 233

மேலே