நீதி தேவதை....

வழக்காடு மன்றங்களில்
மட்டும் கண்கட்டி
வாய்மூடி நிற்கும்
கற்சிற்பங்கள் .....

கண்கள் திறந்திருந்தாலே
குற்றங்கள் குதூகலிக்கும்,
மூடியிருந்தால் மட்டும்
முடக்கப்படவா போகிறது?

வாதாடிகள் அனைவரும்
சூதாடிகலாகின்றனர்
நீதிமன்றங்களில்....

நீதிமான்களின் இதழ்களில்
புரளும் பொய்யுரைகளைக்
கேட்கக் கூடாதென்றே
கண்ணோடு காதையும்
சேர்த்துக் கட்டிக்கொண்டாயோ?

ஆவணம் பிறப்பிக்கும்
அதிபதிகளே,
சட்டங்களின் சதிபதிகளாக
வலம் வருகின்றனர்...

வழக்காடு மன்றங்களில்
இருப்பது நீதி போதிக்கும்
தேவதையா?
களிமண்ணால் ஆன
கற்சிலையா?

தற்போதய
கடற்கரைப் பகுதி
கல்லறைப் பகுதியாகி
வருகிறது....

கற்பில் சிறந்தவள்
கண்ணகிஎன்று
கடற்கரையில் சிலை
வைத்தீர்கள்...

ஏன் நும் வீட்டில்
கற்பில் சிறந்தவர்
எவரும் இலரோ?

நீதி தேவதை கூடவா
நியாயமானவளாக
தென்படவில்லை?

இரண்டு மணி நேரம்
அசையாமல் நின்றால்
மனிதனுக்கு கோயில்
கட்டும் , சமுதாயம்....

நீதியைக் கொணர்ந்து
வீதியில் நிறுத்துங்கள்...
நீதி மன்றத்தில்
தேவதையாய் நின்றவள்
வீதி மன்றங்களில்
தெய்வமாய் நிற்கட்டும்...

மக்களே தன் நீதிகளை
தராசுத் தட்டில் வைத்து
எடை போடட்டும் .....!

நீதி மன்றங்கள்
நிசப்தமாகட்டும்...!

இனியொரு விதி செய்வோம்....
நீதியை பாதுகாக்க
அநீதியை பணிநீக்கம்
செய்வோம்......!
ஜெய்ஹிந்த் .....!

எழுதியவர் : வனிதா (19-Aug-10, 10:43 am)
சேர்த்தது : poetvanitha
பார்வை : 1760

மேலே