நகைச்சுவைத் துணுக்குகள்

ராமுவும், சோமுவும் காபி ஷாப் சென்றிருந்தனர்..
சோமு : “காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு.”
ராமு : “சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!.”

ராமு : “என்ன பண்ணிட்டிருக்க சோமு?”
சோமு : “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
ராமு : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
சோமு : “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”..!

ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!
ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!

குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?
சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று...
அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்...!!


எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (29-Nov-11, 6:36 pm)
பார்வை : 1004

சிறந்த நகைச்சுவைகள்

மேலே