வெற்றிப்படிக்கட்டு!

சார்லஸ் தினம் பன்னீரில் குளிப்பவன்.செந்தில் சில சமயம் பசிக்கு தண்ணீரை உணவாய் குடிப்பவன்.செந்திலின் தந்தை பாண்டி சார்லஸ் வீட்டு வேலைக்காரர்.பாண்டி எப்போதும் செந்திலை பக்கத்துக்கு வீட்டு பசங்ககூட ஒப்பிட்டு தரக்குறைவாய் பேசுவது, படிபடியென்று அவனை அடிக்கடி திட்டுவது என கசக்கிபிழியும் கரும்புசாறு மெசின் அவர்.ஆனால், செந்திலுக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம்.ஒருநாள் பாண்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கபோகும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிவிட்டார்.உடனே! அவரை சார்லசின் தந்தை மருத்துவமனையில் சேர்த்தார்.தந்தையின் நிலைகண்டு தவித்துபோய் தாயை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான் செந்தில்.செந்திலைகண்டதும் கொதித்து எழுந்தார் பாண்டி.உன்னைமாதிரி புல்லையபெத்தா சாகத்தான் செய்யனும், இன்னைக்கு ஐயா இல்லனா பணத்துக்கு என்ன பண்றது என்று ஆவேசப்பட்டு பேசும்போது சார்லசின் தந்தை குறுக்கிட்டு டேய்...பாண்டி இப்பும்தான் உனக்கு ஆபரேஷன் முடிஞ்சிருக்கு, அதனால கொஞ்சம் பொறுமையாப்பேசு.உன் ஆபரேஷனுக்கு பணம் கொடுத்தது நா இல்ல உன் பையன்தான்.அட! போங்கையா நெத்தில வைக்க ஒத்தருவாகூட இவனால சம்பாதிக்க முடியாது.இவன் பத்தாயிரம் குடுக்கிறதா...?நிசமா பாண்டி! உன் பையன்தான் கொடுத்தான்.போன மாசம் என் பையன் கூட சேர்ந்து கிரிக்கெட்டு மேட்ச்சுக்கு பக்கத்து ஊருக்கு போயிருக்கான்.அங்க நடந்த போட்டில உன் பையனுக்குத்தான் மென் ஆப் தி மேட்ச் கொடுத்துருக்காங்க.அதாவது எல்லா பசங்கலவிட நல்ல விளயடிருக்கான்.அந்த பரிசுதான் இந்த பத்தாயிரம்.பாண்டி ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு திறமையிருக்கும், உன் பையனுக்கு அது கிரிக்கெட்டுலயிருக்கு அத புரிஞ்சிக்கோ! அதவிட்டுட்டு அவன திட்டாத, அடிக்காத.கிரிக்கெட்டுக்கு கடவுளான சச்சின் பத்தாங்கிளாஸ் பைலு.ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் படிக்கிறவயசுல கீபோர்டும் கையுமா அலஞ்சவருதான்.அதனால உன் பையன் திறமைக்கு வேகத்தடையா இல்லாம வெற்றிபடிக்கட்டா என்னைக்கும் இரு.தன் தவறை புரிந்துகொண்டு செந்திலை நெஞ்சோடு அணைத்தார் பாண்டி.