புரிந்தது இறந்தபின்...........!!!!!! (சிறுகதை)

என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு அழகிய ரோஜாச்செடியை வளர்த்தேன்.......
அதனோடு ஒரு பழத் தோட்டமும் இருந்தது....
அழகிய ரோஜா தினம் மலர்ந்தது. அந்த மலரை என் பழத் தோட்டத்திற்கு தினம் ஒரு சிட்டுக்குருவி வந்தது.....
அது என் வீட்டு வெள்ளை ரோஜாவினை ரொம்ப காதலித்தது.....

அதன் காதலை சொல்லியது வெள்ளை ரோஜாவிடம்
ஆனால் அந்த ரோஜா அதற்கு சொல்லியது நான் என்று சிவப்பு ராஜாவாக மாறுகிறேனோ அன்று உன்காதலை ஏத்துக்கிறேன் எண்டது......

தொடர்ந்து சிட்டுக் குருவி வந்து போனது அது
தன காதலை ஏற்றுவிடும் நாளை எண்ணி
ஆனால் அது எதிர்பார்த்ததுபோல் ரோஜாவில் மாற்றம் எதுகுமில்லை

தன காதலை எப்படியேனும் புரிய வைக்க விரும்பிய சிட்டுக்குருவி தன உடலை அந்த ரோஜாவின் முட்களினால் காயப்படுத்தி
அதன் உடலால் வடிந்த உதிரத்தை வெள்ளை ரோஜாவின் மீது தடவியது........

வெள்ளை ரோஜா சிகப்பு ரோஜாவானது அது சிட்டுக் குருவியிடம் காதலை சொல்ல எண்ணி நோக்கியது

ஆனால் அது நோக்கிய வேலை சிட்டுக்குருவி மரணத்தை தழுவிவிட்டது
பிடிவாதத்தான் தன் உயிரையே இழந்த சிட்டுக் குருவியை எண்ணி வருத்தம் கொண்டது ரோஜா.....
வருந்தி என்ன பலன் ஒன்று இருக்கும் பொது தெரியாத அருமை இழப்பின் பின்புதான் தெரியும் என்பதை உணர்ந்து கண்ணீர் விட்டது..............
அதன் காதலின் ஆழம் எண்ணி......

காலம் கடந்தபின் உணர்ந்து என்ன பலன்........?இப்படி நிஜ வாழ்க்கையினைக் கழிப்பவர்கள் உணர்ந்தால் சிறப்பாய் இருக்கும்.....
அனைவர்க்கும் இது ஒரு பாடமாக அமையட்டும்......
என்று தன் மனதை கூறியது ஆழ்ந்த துன்பத்துடன் என்வீட்டு ரோஜா........



எழுதியவர் : அம்மு (29-Nov-11, 7:47 pm)
பார்வை : 1140

மேலே