கற்பழிக்கப்பட்ட காதலி காதலனுக்கு சொல்லும் கண்ணீர் பதில்
களவாடிய கவிதை....
- தற்கொலை படை 'கரும்புலி'யின் கற்பனை கதை.....
(கற்பழிக்கப்பட்ட காதலி காதலனுக்கு சொல்லும் கண்ணீர் பதில்)
உன்னவள் நான் இல்லை
உன்னை பார்க்கவும்
எனக்கு தகுதியில்லை
தன்னிலை மாறியவள்
வழியில்லைதலைவன் உன்
கண் காண துணிவில்லை
தயவால் நான் சாக
விஷமில்லை
உனக்காய் நான்
பாதுகாத்த பெண்மை பறிபோனது...
பரிசாய் கொடுத்த முத்தங்கள் பலியானது..
கண்ணின் மணி என உன் உருவத்தை
தேக்கிவைத்தேன்
அழுகையின் பயனாய் அதை
கரைத்துவைத்தேன்
நாட்டை காக்க நீ சென்றாய்
நரிகள் நாய்கட்கு உணவானேன்
உரிமை ஆடையை நீ நெய்தாய் - என்
உண்மை ஆடையை அவன் கொய்தான்
முத்தங்கள் பரிமாறிய - உன்
மீசையின் வாசத்தை
மிருகங்கள் மொய்த்தன...
ஊணாய் கலந்திட்ட - உன்
உறவின் உடம்பை
ஓ நாய்கள் மேய்ந்தன...
அம்மா பார்த்த என் உடம்பை
அம்மனமாய் பார்த்தார்கள்
அக்கிரமக்காரர்கள்
அக்கினியாய் வெடிக்க
ஆயத்தமாணேன்,
ஆயுதமுமாணேன்....
'தீ'யே 'குழம்பா'னது கண்ணகியின் சிலம்பொலி...
'கொழும்பே' 'தீ'யானது நான் ஈழத்து கரும்புலி...