சம்பளம் வாங்கிடங்கோ......!!!



மாதத்தின் மூன்றாம் நாள்..!!

வேளை செய்கையில் அடிப்பட்டு
ரத்தம் சொட்டிய இடத்தில் இப்போது
வலி தெரியவில்லை..!!

மனம் சுள்ளென்று உரைக்க... முதலாளி
திட்டிய வார்த்தைகளை நினைக்க மனம்
வரவில்லை...!!

மூன்றாம் வேலை உணவு உண்ண
இனி யோசிக்க தேவை இல்லை..!!

நடு ஜாமத்து இனம் புரியா விழிப்பிற்க்கும்,
மன குழப்பத்திற்கும் இன்று வழி இல்லை..!!

எங்கள் வீட்டு கடனின்
வட்டி பணம் கொடுக்க
என்னை எதிர் பார்க்கும் என் தாயின்
மன வலியை இன்னும் என் மனதில்
புதைத்து வைக்க மனம் வரவில்லை ....!!

முற்றத்து பிள்ளையாரிடம் நடக்கும்
வழக்கமான புலம்பல் இன்று இல்லை..!!

எங்கள் வாடகை வீட்டின்
சொந்தகாரரின் முதல் பொழுதின்
சந்தேக பார்வைக்கு பலியாக
இனி தேவை இல்லை...!!

அன்பு தங்கை ஆசையாய் கேட்டிருந்த
புடவையை வாங்கும் என்னத்தை இனியும்
ஒத்தி போடா மனம் இல்லை...!!

இந்த இன்பங்கள் மாதத்தின் முதல் மூன்று
நாட்கள் மட்டுமே என்பதை உணரவும்
மனம் மறுக்கவில்லை....!!

நாங்கள்....
மாதத்தின் கடைசி இருபது நாட்கள்
அயறாது உழைக்கும் தொழிலாளிகள்

முதல் மூன்று நாட்களோ ஆணவமில்லா
மகா ராஜாக்கள்.....!!!!

எழுதியவர் : இன்பா (10-Dec-11, 12:53 am)
பார்வை : 308

மேலே