அம்மா உன் மடி வேண்டும்

மனம் முழுதும் துணிவு
சொல்முழுதும் கொள்ள முடியாத அன்பு
தன்னை தான் நேசிப்பதை விட
என்னையும் பிறரையும் நேசித்தாள்....
தன் வாழ்வின் துன்பங்களைத் தாண்டி
வந்து எவ்வளவு இன்பங்களைப் பகிர்ந்தளித்தாள்..
என்னை பற்றிய கனவுகள் கோடி..அவளிடம்
வாழ்வின் புரிதல் எனக்கு வசப்ப்படுமுன்
விடை பெற்றாள்..
நெஞ்சு நிறைய துக்கமும்
கண் நிறைய கண்ணீரும் இன்னுமுண்டு
என் மூச்சுக்காற்றின் அகரம்,
இன்றென் ஒவ்வொரு வெற்றியின் எழுத்தும்..
இவற்றுள் அடங்காது அவளின் அன்பு
அடக்கமுடியாத அன்பும்
கொள்ளமுடியாத பாசமும்
என்மீது கொண்டவள்
என் தங்கத்தை மூச்சை
பாதுகாக்கத் தவறியதென் மூடத்தனம்
நொந்து செத்தாலும் அலுத்து புரண்டாலும்
அவள் வரமாட்டாள் என்னைத் தாலாட்ட
சீராட்ட........
நெஞ்சமொன்று அவள்போல் கிட்டுமோ
மடி ஒன்று அவள்போல் வருமோ
நான் மீண்டும் பிறக்க
அம்மா
உன் மடி வேண்டும்..................