எல்லாம் அவளே

பெண்களை கவிதையில்
பார்க்கிறோம்
பெண்கள் எழுதும் கவிதையை
மனம் உவந்து பார்க்கிறோம்
பார்வையும் அவளே
பார்வையின் அழகும் அவளே
பார்வையின் பொருளும் அவளே
பார்க்கும் கவிஞையும் அவளே
பார்க்கும் எல்லாம் அவளே
---கவின் சாரலன்