சத்தங்கள் எங்கே ???????
சத்தங்கள் எங்கே?......
அதிகாலையில் எழும் கதிரவனை
காண ஆசைப்பட்டேன் - நடந்தது !
மார்கழி மாதத்தின் குளிரை
அனுபவிக்க ஆசைப்பட்டேன் - நடந்தது !
காலையில் மலரும் மலர்களை
காண விழைந்தேன் - மலர்ந்தது !
பிஞ்சு குழந்தையின் மழலை மொழி
கேட்க விரும்பினேன் _ கேட்டது !
வண்ணத்துப் பூச்சிகளின் நிறங்களை
தொட நினைத்தேன் - நடந்தது !
ஆனால்........
என் ஆசைகளில் விதி விளையாடியது !!
ஓலை குடிசைகளில் வாழும் ஏழைகளின்
சிரிப்பு சத்தங்களை கேட்க ஓடினேன் .......
பாவம்!!!! அவர்கள் வயிற்றில் பசி
என்னும் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது...
ஏழையின் சத்தங்கள் எங்கே ????:( :( கேட்குமா??