!!! இடுப்பொடிந்த சனநாயகம் !!!

யாரிடம் கேட்பது கேள்வி?
யாரிடம் கேட்பது நீதி?
எங்கு தேடுவது சனநாயகத்தை?
எங்கு இருக்கிறது மனிதநேயம்?
எங்கு போகிறது இந்த நாடு?
எங்கே நமது பண்பாடு?
எங்கே உனது சமதர்மம்?
எங்கே உனது ஒழுக்கநெறி?
எதை நோக்கி உன் முன்னேற்றம்...?
உனது சமயோசித புத்தியின்
நோக்கம்தான் என்ன?
பலமுறை எனக்குள்ளே
நான் கேட்டு கேட்டு
விடையறியா என் வினாக்களை
யாரிடம் கேட்பது?
மனிதனிடமா? கடவளிடமா?
இருவரையும் தேடுகிறேன் - என்
வினாக்களை போல்தான்
ஆகிவிட்டார்கள்
அந்த இருவருமே...
எஞ்சி இருப்பதெல்லாம்
கேள்விகள் மட்டுமே
விடைதெரியாத - என்
கேள்விகளெல்லாம்
கேள்விக்குறியாகி போய்விட்டன - நம்
சனநாயகத்தை போலவே...
ஊழல், சுயநலம், லஞ்சம் என
சட்டம் ஒழுங்கு
சீர்கெட்டு
இடுப்பொடிந்து
கிடக்கும் சனநாயகத்தை
யார்? தூக்கி நிறுத்துவது?
எல்லோருமே ஊனமாய்...!!!