ஹைபுன் கவிதை

கையில் குழந்தையுடன்
படியில் நின்றிருந்தவர்களைத்
தள்ளிக் கொண்டு வந்து நின்றார்.

பேருந்தின் நடனத்தை விட
அவரின் நடனம் மோசமாய் இருந்தது.

குழந்தையை யாரிடமாவது கொடுத்து விடலாம் என்ற முயற்சிக்கு
அழுகைப் பலனளிக்க வில்லை.
யாரும் இடம் தராததால்
நான் எழுந்து இடம் கொடுத்தேன்.
அசதியுடன் தூர நின்றேன்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பிப்பார்த்தால் ,

அங்கே மூன்று நாள் அசதியுடன்
நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
குழந்தை வடிவில்

எழுதியவர் : bharatichandran (15-Dec-11, 8:48 pm)
பார்வை : 238

மேலே