என்னாளும் என்னை நீ மறவாதே 555

சிறைசாலை....

மழைமேகம் கூடும் வேளையில்
மயில்கள் தோகைவிரித்து ஆடுவதைப்போல்....

பாவை ஒருத்தி கைகளை விரித்து
ஆடுவதை கண்டேன்......

மேகங்கள் ஒன்றோடுஒன்று
மோதி ....

மழைத்துளிகளாக பூமியை
முத்தமிட்டது ......

சிலத்துளிகள் மட்டும் அவளின்
இதழ்களை முத்தமிட்டு
பிரியமனமில்லாமல் பிரிந்தபோது.....

அதை என் கைகளில் தாங்கினேன்....

அந்தநிமிடம் அவள் கண்களால்
என்னை கைதுசெய்தால்......

ஆயுள் கைதியானேன் அவள் இதயசிரையில்......




இன்றுவரை விடுதலை இல்லை.....

இன்று அவள் என் மனைவி....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Dec-11, 4:14 pm)
பார்வை : 351

மேலே