இன எதிரி!

எத்தனை முறை நீ
உன் காதுகளை மூடிக்கொண்டாய் தமிழா!
கேட்டுக் கொண்டே இருந்தது
அங்கு வெடிச் சத்தம்!

செங்கோல் சிவப்பைச் சிந்த...
கொடுங்கோல் கோலோச்ச
சிதறிய தலைகள் சிந்தின பல துளிகளை
சில எதிர்பார்ப்புகளையும் சேர்த்து!

இங்கு இன்னவர் யாரென்று
அடையாளம் காட்டத்தானோ
அங்கு உருண்டன நம்மவர் சிரங்கள்
ஏன் இவ்விடம் இல்லை காக்கும் கரங்கள்

சத்தமும் இரத்தமும்
இன்றங்கு இல்லாமல் இருக்கலாம்
ஆனால் என்றும் மூடி வைத்த எரிமலையாய்
வெடிக்க துடித்திருக்கும் அந்த சிவப்பு தினங்கள்...

ஒரே நிறமெனினும் தமிழா
நடப்பது கேட்காது செவிடாய் இருந்த
காரணம் கொண்டு
இன எதிரி என அழைக்கப்படுவாய், இனி...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (18-Dec-11, 6:58 pm)
பார்வை : 294

மேலே