சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !
சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !
அம்மா என்ற அழகு வார்த்தை ஆங்கில கலவியால்
அர்த்தமற்று போனதை எண்ணி -------------
சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !
தமிழை படித்தால் தமிழகத்தில் கூட இன்று
தனித்துவம் இல்லாது போனதை கண்டு -------
சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !
இலக்கிய நடையில் இனித்ததமிழ் இன்று
இல்லாமலே ஆனதை எண்ணி -----------
சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !
தாயினும் மேவிய தன்பெயர் சொல்லி
அரசியல் விளையாடும் அவலரை கண்டு ------------
சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !
தமிழ் பாலூட்டி வளர்த்த தன் மைந்தர்களே
தன் மார்பினை அறுக்கும் மடமையை எண்ணி ------
சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !
எங்கும் தமிழன் என்று சொன்னாலே
அங்கு மறுக்கப்படும் அவன் உரிமையை கண்டு ------
சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !
தமிழைக்காக்க தமிழனும் இங்கு
ஆயத்தம் ஆகா நிலையினை எண்ணி ----------------
சீறுகின்றாள் செந்தமிழ் தாய் !